பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி ஆக்கம்: 1. ஆக்கக்கிளவி, 2. படைப்பு. ஆக்குதல் = படைத்தல் [ஆக்கு> ஆக்கம் (தொழிற்பெயரும், தொழிலாகு பெயரும்).] ஆக்கை: 1. உடம்பு, 2. கூரை வேய உதவும் நார். யாத்தல் = கட்டுதல் [யா> யாக்கை>ஆக்கை = எழுவகை மூலங்களால் கட்டப்பட்ட உடம்பு.] ஆகட்டும்: சரி, அப்படியாகுக, ஆகவிடட்டும். [ஆக+ஒட்டும் >ஆகவொட்டும்>ஆகட்டும்.] ஆகா1: வியப்புக் குறிப்பு [ஆ+ஆ = ஆவாஆகா] ஆகா' ஆகுக என்பதன் எதிர்மறை வடிவம். [ஆகு>ஆகாது>ஆகாத >ஆகா (ஈறுகெட்ட எ.ம.பெ.எ).] ஆச்சாள்: தாய் (ஆத்தாள்>ஆச்சாள்] ஆச்சி : 1. தாய், 2. பாட்டி, 3. மூத்த அக்கை. ஆய் = அம்மை (ஆய்>ஆய்ச்சி>ஆச்சி.] ஆசாரி : 1.பொன்தொழில், 2. தச்சுத்தொழில் செய்வோர் தங்கக் கம்பிகளை இணைத்து நகை செய்தல்; மரச்சட்டங்களை இணைத்து மரப்பொருள் செய்தல். ஆசு = பற்று, இணைப்பு (ஆசு+ஆரி>ஆசாரி>ஆரி. (சொல்லாக்க ஈறு)] ஆசிரியன்: குற்றம் நீக்கும் குரு. ஆசு = குற்றம், இரிதல் = நீங்குதல் [ ஆசு + இரியன் = ஆசிரியன்.] 25