பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி ஆண்டு: கால அளவு [ஆண்டு = மூங்கில் முளை] ஆண்டிற் கொருமுறை மடங்கல் (ஆவணித்) திங்களில் சரியாக 365 நாள் இடைவெளிக்கொருமுறை முளைக்கும் மூங்கில் முளைக்கு 'ஆண்டு' எனும் பெயர் உள்ளமையால், அதுவே ஆண்டைக் குறித்த கால அளவைப் பெயராயிற்று. ஆண்டை : 1. அங்கு, 2. அவ்விடம். ஆ = சேய்மைச்சுட்டு [ஆ>ஆண்டு>ஆண்டை] ஆணம்: சாறு, குழம்பு. அளம் = சேறு, சாறு, குழம்பு [அளம்>ஆளம்>ஆணம்.] ஆணவம்: செருக்கு ஆண் + அ+(வ்)+அம் = ஆணவம் அள் = செறிவு, திண்மை, வலிமை, திண்மையுள்ள. [ஆள்>ஆளவம்>ஆணவம் ] ஆணி: 1. பதியும் இரும்பாணி, 2. அச்சாணி. ஆழ்தல் = பதிதல் [ஆழ்>ஆழி>ஆணி.] ஆணை: அதிகாரம், கட்டளை. ஆளுதல் = அதிகாரம் செலுத்துதல் [ஆள்>ஆண்>ஆணை] ஆத்தாள் : 1. தாய், 2. மனைவி, 3. தாய்போல் காக்கும். பெண்தெய்வம். [அகம் + அத்து+ஆள்>அகத்தாள்>ஆத்தாள்] ஆம்பல் : 1. அல்லி, 2. குமுதம். 27