பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [ஆல்>ஆலம் (சுற்றுவட்டம்) ஆரம்.] ஆரியம்: வடிவில் சிறுத்த கேழ்வரகு தவசம். அருதல் = குறைதல் [அரு>ஆரு>ஆரி>ஆரியம்.] ஆல் அளவிற் பெரிய ஆலமரம் அகல் = அகன்ற = பெரிய [அகல்>ஆல்] ஆலத்தி : வழிபாட்டின்போது சுற்றிக்காட்டப்படும் திருச்சுடர் ஆலாற்றுதல் = சுற்றச் செய்தல் = [ஆல்+ ஆற்று = ஆலாற்று> ஆலாத்து>ஆலாத்தி> ஆலத்தி] ஆலத்தி, ஆரத்தி என்றுமாம். ஆலை: கரும்பாலை, (சக்கரத்தால் இயங்குமிடம்) தொழிற்சாலை. ஆல் = சுற்று, சுழற்று [ஆல் > ஆலை = கரும்பைப் பிழியச் சுற்றும் பொறி] ஆவடி: 1.மாட்டுமந்தை, 2. தங்குமிடம். ஆ+ அடி = ஆவடி [ஆ>ஆநிரை அடி= நிலையம், தங்குமிடம்.] ஆவணம்: 1. உரிமை ஓலை, 2. அடிமைத் தனம். ஆ (கு)+ வண்ணம் = ஆவண்ணம் ஆவணம் [ஆள்>ஆளவம்>ஆவணம்.] ஆவல்: 1. பேராசை, 2. விருப்பம். [அவா + அல்>ஆவல்] ஆழ்-தல்: 1. ஆழமாகத் தோண்டுதல், 2. அகழ்தல். அகழ்தல் = தோண்டுதல் [அகழ் > ஆழ்-தல்] ஆழம்: ஆழ்ந்திருத்தல் 29