பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 வேர்ச்சொல் சுவடி ஆழ்தல் = ஆழமாதல் [ஆழ்>ஆழம்.] ஆழாக்கு: உழக்கு, அரைக்காற்படி. [அரையுழக்கு>ஆழாக்கு] ஆழி : (வளைந்த) 1. மோதிரம், 2. சக்கரம், 3. அரசு, 4. ஆளுமை. வளைவுப்பொருள் ஆல் = [ஆல்>ஆள்>ஆழி] ஆழி ஆழம் நிறைந்த கடல் [ஆழ்>ஆழி] ஆள் 1.திறனாளன், 2. வினையாற்றுபன், 3. ஆண். ஆலுதல் = வினை மேற்கொளல் [ஆல்>ஆள்.] ஆளன்: ஆளுபவன், தலைவன், அடிமை. ஆள்தல் = அடக்கியாளுதல் [ஆள்>ஆளன்.] ஆற்றல்: வலிமை ஆல் = செயற்படுதற்கேற்ற வலிமை, செயற்படுதல் [ஆல்>ஆற்று>ஆற்றல்) ஆற்று-தல்:1. செய்யக் கூடியதாதல், 2. வலிவுறுதல். ஆல் = செயற்படுதற்கேற்ற வலிமை [ஆல் > ஆற்று-தல்.] ஆற்று--தல் : பசி, துயரம் முதலியன தணித்தல். அகற்றுதல் = நீக்குதல், தணித்தல் [அகற்று>ஆற்று -தல்.] ஆற்றுநர்: வழிப்படுத்துவோர்