பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி ஆறு = வழி (ஆறு>ஆற்று>ஆற்றுநர்] ஆறு: 1. அறுத்துக் கொண்டோடும் நீர்நிலை, 2.வழி. [அறு ஆறு.] ஆறுதல்: 1. தணிதல், 2. மன அமைதி பெறுதல். (அறு > ஆறு ஆறுதல்] இசை-தல்: 1. உடன்படுதல், 2. ஒத்துப்போதல். இழைதல் - பொருந்துதல் பொருள் [இழை> இயை> இசை-தல்] இசை-த்தல்: 1. தாளத்துடன் பொருந்திப் பாடுதல், 2.இசைக்கருவி. [இயை>இசை -தல்] இசை-த்தல்: கட்டுதல் இள் = இணைதற் பொருள் [இள்>இயை>இசை-த்தல்.] இசைவு': பொருந்துகை [இயை>இசை>இசைவு] இசைவு: 1.உடன்பாடு, 2. இணக்கம். [இயை> இசை இசைவு] இடம் : 1. சூழல், 2. வீடு. இள்-பொருந்தற் கருத்து. [இள்> இடு>இடம்.] இடர்: 1. நெருக்கம், 2. வருத்தம், 3. வறுமை, 4. ஏதம். இடு-உள்ளொடுங்கல் 31