பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 வேர்ச்சொல் சுவடி [இடு இடர்.] இடி-தல் 1. தகர்தல், 2. கரையழிதல். இல்-துளைத்தற் கருத்து [இ இடு>இடி-தல்.] இடி-த்தல்:1. மோதுதல், 2. தாக்கிப்படுதல். இல்-பொருந்தற் கருத்து. [இல்>இள்>இடு>இடி-த்தல்] இடியப்பம்: அரிசின் மாவினால் செய்யப்பட்ட சிற்றுணவு இழை = நூல் போன்ற பிழிவு [இழையப்பம் > இடியப்பம்.] இடு-தல் : ஒன்றை வைத்துக் கொள்ளுவதற்குரிய இருப்பிடம் [இள் > இடு-தல்.] இடு-த்தல்: சிறுத்தல் இல்-இளமைக் கருத்து [இல்>இள்>இடு-த்தல்] இடுக்கண் : 1. துன்பம், 2. வறுமை. இடு-உள்ளொடுங்குதல். [இடு>இடுக்கண் இடுக்கி : நெருக்கிப் பிடிக்கும் கருவி இடு = உள்ளொடுங்குதல் [இடு> இடுக்கி.] இடுக்கு-தல் : 1. கவ்வுதல், 2. நெருக்குதல். [இடு>இடுக்கு -தல்.] இடுக்கு : ஒடுங்கிய இடைவெளி [இடு> இடுக்கு.]