பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி இடும்பை : நெருக்கடியான துன்பம் இடு-நெருக்குதல் [இடு இடும்பை] இண்டு : மிகச்சிறிய இடைவெளி அல்லது துளை [இடு> இண்டு] இணங்கு: 1. இணக்கம், 2. ஒப்பு. இள் = இணைதற் பொருள் [இள்>இண்> இணகு இணங்கு] இணை-தல் : 1. சேர்தல், 2. கூடுதல். இயை-இணைதற் பொருள் [இயை>இணை - தல்.] இமை-த்தல் : இமை கொட்டுதல் அம்-பொருந்தற் கருத்து [அமை>இமை -த்தல்] இயங்கு-தல் : 1. அசைதல், 2. செல்லுதல், 3. சுழலுதல். உய் = செலுத்துதற் கருத்துவேர் (உய்> இய>இய> இயங்கு-தல்] இயல்பு: 1. தன்மை, 2. இயங்கு முறை. உய் = செல்லுதற் கருத்து (உய்> இய>இய> இயல் இயல்பு ] இயற்று-தல் : 1. செய்தல், 2. நடத்தல், 3. தோற்றுவித்தல். உய்-செல்லுதற் கருத்து. [உய்> இய்> இய> இயற்று-தல்] 33