பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 வேர்ச்சொல் சுவடி இயை-தல்: 1. பொருந்துதல், 2. ஒத்தல். இள்-இணைதற் கருத்து. [இள்> இய>இயை-தல்.] இயை--தல் : பொருந்துதல் இள் = இணைதற் பொருள் [இள்>(இய்)>இயை இயை-தல்.] இர-த்தல் : 1. பிச்சையெடுத்தல், 2. வேண்டுதல். இள்- இளைமைக் கருத்து, எளிமை. {இள்> ள> இர-த்தல்.] இரங்கு-தல் : 1. பிரிவுகாட்டுதல், 2. அருள் செய்தல். இள்-பொருந்தற் கருத்து. [இள்> இள> இர>இரங்கு-தல்.] இரு-த்தல்: உளதாதல், உட்காருதல். இள்-பொருந்தற் கருத்து. [ இல்> இர்>இரு-த்தல்.] இரைச்சல் : ஒலி இல்-துளைத்தற் கருத்து. [ இல்> இர்> இரை> இரைதல்> இரைச்சல்.] இலக்கணம்: மொழியைப் பயன்படுத்துவோர் மொழியின் வரையறை இலக்காக எடுத்துக்கொள்ளும் நூல். [ இலக்கு> இலக்கணம்.] இலக்கு : 1. குறிப்பொருள், 2. இடம். இலங்கு-திகழ்தல் பொருள். [இலங்கு இலக்கு} இலஞ்சி : 1. குளம், 2. ஏரி, 3. கொப்பூழ். [ இல்> இலங்கு > இலஞ்சி.] இழ-த்தல்: 1. தவறவிடுதல், 2. சாகக் கொடுத்தல்.