பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி இல் -இன்மைப் பொருள். [இல்> இல>இழத்தல் இழு-த்தல் : 1. ஈர்த்தல், 2. கவர்தல், 3. உறிஞ்சுதல். இல்-பொருந்தற் கருத்து [இல்>இள்> இழு-த்தல்.] இழை-தல்: 1. நூற்படுதல், 2. உராய்தல், 3. கூடுதல், 4. பிணைதல். இள்-இணைதற் கருத்து [இள்>இளை>இழை-தல்.] இளக்கம்: 1. மென்மை, 2. நெகிழ்ச்சி. இள்-இளமைக் கருத்து [இள் > இளகு> இளக்கு > இளக்கம்.] இளமை : 1. இளம் பருவத்து அழகிய தோற்றம், 2.GILDGÖT GOLD. [இள் > இள> இளம்>இளமை. இளிவு: இகழ்ச்சி இல்-உள்ளொடுங்கற் கருத்து [இல்> இள்> இளி> இளிவு] இளை-த்தல் :1. மெலிதல், 2. பின்னடைதல், 3. வளங்குறைதல். [இல்> இள்>இளை-த்தல்.] இளை-த்தல் : 1. வருத்துதல், 2. கெடுத்தல். இள்-உள்ளொடுங்கற் கருத்து [ இள்> இளை> இளை-த்தல்.] இற-த்தல் : 1. கழிதல், 2. சாதல். இள்-உள்ளொடுங்கற் கருத்து [இள் > இறு> இற-த்தல்.] இறகு : 1. சிறகு, 2. மயிற்பீலி. 35