பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 வேர்ச்சொல் சுவடி இறு-ஒடிதல், வளைதல் [இறு>இற>இறகு} இறங்கு-தல்: 1.தங்குதல், 2. உட்செல்லுதல். இள்-துளைத்தற் கருத்து [இள்> இற>இறங்கு-தல்.] இறுக்கு-தல் : 1. அழுந்தக் கட்டுதல், 2. உள்ளழுத்துதல். இறு-நெருக்குதல் [இறு> இறுக்கு -தல்] இறை-த்தல் : 1. நீரை வீசித் தெளித்தல், 2. நீர்ப் பாய்ச்சுதல். இறு-ஒடிதல், சிதறுதல் [இறு>இறை-த்தல்] இன்பம் : 1. அகமகிழ்ச்சி, 2. னிமை. இன்-மகிழ்வுக் கருத்து [இன் > இன்பு இன்பம்.] இன்னல் : துன்பம் இல்லுதல்-துளைத்தல், குத்துதல், துன்புறுத்துதல். [இல்லு இன்னு> இன்னல்] இனிப்பு :1. தித்திப்பு, 2. மகிழ்ச்சி. இள்-மகிழ்ச்சிக் கருத்து [இன்>இனி> இனிப்பு} ஈதல் : கொடுத்தல் இள்-பொருந்தற் கருத்து [இல் >ஈல் > ஈன் >ஈதல்.] ஈர்ப்பு : 1. இழுப்பு, 2. கவர்தல், 3.கவர்ச்சி. இல்-இழுத்தல் [இல் > ஈல்> ஈர் >ஈர்ப்பு.] உக்கம்: 1. நெருப்பு, 2. வெப்பம்.