பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி உல்-வெப்பப்பொருள் உல்> உள்கு உக்கம்.] உக-த்தல்:1.உயர்தல், 2. உயரப் பறத்தல். உய்-உயர்ச்சி (உய்>உய>உக> உக-த்தல்] உச்சம், உச்சி : 1. உயரம், 2. நுனி. உய்-உயர்ச்சிக் கருத்து (உய்> உய்யம் > உச்சம்> உச்சி.] உட்கார்-தல்: வீற்றிருத்தல் உள்-பொருந்தற் கருத்து உள் உள்கு உள்குறு> உள்குறு-தல் உள்கார்-தல்> உட்கார்-தல்] உட்கு-தல் : 1. அஞ்சுதல், 2. நாணுதல். உள்- உள்ளொடுங்கற் கருத்து [உள் உள்கு> உட்கு.] உடல்: உடம்பு; உடல்தல் = மாறிக் கொள்ளுதல். உழல்தல்-இயங்குதல் [உழல்> உடல்> உடம்பு] உடு-த்தல்: ஆடை முதலியன அணிதல் உல்-பொருந்தற் கருத்து (உல்> உள்>உடு-த்தல்.] உடுக்கை : இடைச் சுருங்கு பறை உடு-நெருக்குதல் [உடு> உடுக்கை] உடை-தல் : 1. தகர்தல், 2. பிளத்தல். 37