பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி 38 உள் - துளைத்தற் கருத்து [உள்>உளை> உடை> உடை-தல்] உடைமை : உடைமைப் பொருள் (உள்> உடு உடை> உடைமை.] உண்(ணு)-தல் : உணவை உட்கொள்ளுதல் உல்-துளைத்தற் கருத்து [உல்> உள்> உண்(ணு)-தல்.] உண்டி : 1. உணவு, 2.சோறு. [உண் உண்டி.] உண்மை: 1. உளதாகை, 2. உள்ளதன்மை, 3. மெய்ம்மை. உல்-பொருந்தற் கருத்து (உல்> உள்> உண்மை.] உணர்-தல்: 1. அறிதல், 2. உணர்கை. உள்- இருத்தல் பொருள் [உள்> உளர்> உணர்-தல்.] உணவு: உண்ணப்படுவன உள் - துளைத்தற் கருத்து [உள்> உண்> உண> உணவு] உதி-த்தல்: மேல் எழுதல் உது-மேலெழும்புதல் [உது> உதி-த்தல்] உதிர்-த்தல்: கீழ்விழுதல் உது-முன் தள்ளுதல் (உது> உது>உதிர்-த்தல்.] உதை-த்தல் : காலாலெற்றுதல்