பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி உது-முன் தள்ளுதல் (உது> உதை-த்தல்.] உமிழ்-தல்: துப்புதல் உம்-குவிதல் கருத்து [உம்> உமி>உமிழ்-தல்.] உயர்-தல்: 1. மேலெழுதல், 2. வளர்தல். உய்-முற்செல்லுதல் (உய்> உயர்-தல்.] உர-த்தல்: 1. கெட்டியாதல், 2. கடுமையாதல். உல்-சிறுகுதல், மிகுதல் (உல்> உரு> உர-த்தல்] உரசு-தல் : உராய்தல் உல்-பொருந்தற் கருத்து [உ> உரை> உரைசு உரசுதல் உரல் : 1. இடிக்கும் உரல், 2. தேங்குழல் அச்சு. உல்-துளைத்தற் கருத்து [உல் உர்> உரல்] உரி-தல்: தோல் முதலியவை கழலுதல் (உரு> உருவு > உரி-தல்.] உரு-த்தல்: 1. அழலுதல், 2. முதிர்தல். உல்-உள்ளொடுங்கற் கருத்து [உல்> உர்> உரு-த்தல்.] உரு, உருவம்: 1. வடிவு, 2. உடல், 3. சிலை. உல்-இயங்குதற் கருத்து [உல்> உர்> உரு>உருவம். உருவு-தல்: 1. கையாற் பொருள் வரும்படி உருவுதல், 39