பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 வேர்ச்சொல் சுவடி 2. ஊடுருவிச் செல்லுதல். ஒருவு = நீங்குதல் [ஒருவுஉருவு-தல்] உரை-த்தல்: 1. சொல்லுதல், 2. ஒலித்தல், 3. உராய்தல். உல் = பொருந்துதல் [உல்>உர்>உ> உரை-த்தல்.] உலக்கை: 1. இடிமரம், 2.கூலம் முதலியன குற்றும் உருண்டு நீண்ட கருவி. உல் = துளைத்தல், குத்துதல் (உல்> உல> உலக்கு> உலக்கை] உலர்-தல்: 1. காய்தல், 2. வாடுதல். உல் = வெப்பப் பொருள் (உல்> உல> உலர்-தல்.] உலுப்பு-தல் : 1. உதிர்தல், 2. அசைதல். (உல்> உலு>உலுப்பு-தல்.] உவகை : 1. மகிழ்ச்சி, 2. அன்பு. உவ = பொருந்தல்,ஒப்புமை உவ-த்தல் = மகிழ்தல் [உவ> உவகை உவமை: ஒப்பு உவ = ஒப்புமை கூறல் உவ-த்தல் = மகிழ்தல் [உவ> உவமை] உழல்(லு)-தல் : 1.சுழலுதல், 2.இயங்குதல்,3. பணியாற்றுதல். உல் = துளைத்தற் கருத்து = [உல்> உள்> உழ் > உழல்> உழல்(லு)தல்.] உழு-தல்: நிலத்தைக் கிளைத்தல்