பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி உல் = துளைத்தற் கருத்துவேர் [உல்> உள்> உளு உழு-தல்.] உழை-த்தல்: 1.முயற்சி, செய்தல், 2.வருந்திப் பணி செய்தல். உழுதல் = நிலத்தில் பணி செய்தல் (உழு> உழை-த்தல்.] உள்ளம்: மனம், கருத்து. [உள்> உள்ளம்.] உளறு-தல் : பிதற்றுதல் உளர் = அசைதல் நடுங்குதல் (உளர்> உளறு-தல்.] உளி 1. தச்சுக் கருவிகளுளொன்று, 2. கூர்மை. உல் = துளைத்தற் கருத்து = [உல்> உள்> உள்ளி உளி.] உளு-த்தல் : மரம் முதலியவை புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல். உல் = துளைத்தற் கருத்து [உல்> உள்>உளு-த்தல்.] உறிஞ்சு-தல் : வாயால் உள்ளிழுத்தல் (உல்> உறு> உறி உறிஞ்சு-தல்.] உறை-த்தல் : 1. சுடுதல், 2. தாக்கிப்பயன் விளைத்தல். உல்-கூடுதற் கருத்து (உல்> உறு> உறை-த்தல்.] உன்னு-தல் : எழும்புதல் உல்-இயங்குதற் கருத்து [உல்> உன்> உன்னு-தல்.] ஊசி : 1. கூர்மை, 2. குண்டூசி. 41