பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 வேர்ச்சொல் சுவடி [உள்> உளி > உசி> ஊசி.] ஊசு-தல் : 1. அழுகுதல், 2. சுவை கெடுதல். ஊழ்-முதிர்தல், கெடுதல், குலைதல் (உழ்> ஊய் > ஊசு-தல்.] ஊஞ்சல் : ஊசல் உந்துதல் - தள்ளுதல் [உந்து>உஞ்சு>ஊஞ்சு>ஊஞ்சல்.] ஊண் : உண்கை, உணவு. உள் - துளைத்தற் கருத்து (உள்> உண்> ஊண்] ஊத்தாப்பம் : ஊதிப்பருத்திருக்கும் தோசை வகை ஊதுதல் = பருத்திருத்தல் [ஊது + அப்பம் > ஊதப்பம்> ஊத்தப்பம்] ஊதாரி: தேவைக்கதிகமாக வீண் செலவு செய்பவர் = ஊதுதல் = மிகுதற் பொருள் [ஊது> ஊதாரி] ஊதியம்: செலவிற்குமேல் மிகுந்த வரவு ஊது = மிகுதல் [ஊது> ஊதியம்] ஊது-தல் : 1. குழல் முதலியன ஊதுதல், 2. தீ எரிய ஊதுதல், 3.நோவுதீர ஊதுதல், 4. சூடாற்ற ஊதுதல், 5. துகள் நீக்க ஊதுதல், 6.விளைவிக்க ஊதுதல். உல்-குவிதல் கருத்து [உல்> ஊல்> ஊது-தல்.] ஊது-தல் : வீங்கு-தல் உல் = மிகுதிப் பொருள் [உல்> உள்> ஊது-தல்.] ஊதை: வளிநோய் (வாதம்) ஊதல் = வீக்கம்