பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [ஊதல்> ஊதை] ஊழியம்: 1. தொண்டு, 2. தொழில். 3. பணி (உழை> ஊழையம் >ஊழியம்.] ஊற்று-தல்: 1. வார்த்தல், 2. வெளியே விடுதல், 3. வெளியேறுதல். (ஊறு>ஊற்று-தல்] ஊன்று-தல் : 1. அழுந்த வைத்தல், 2. துணையாகப் பற்றுதல், 3.தாங்குதல், 4. குழியில் நடுதல். உல்-பொருந்தல் கருத்து [உல்>ஊல்> ஊன் >ஊன்று-தல் எச்சம் : 1. மிச்சம், 2. பறவையின் கழிவு. {எஞ்சு>எச்சு>எச்சம்.] எடு-த்தல்: 1. மேற்கொள்ளுதல், 2. தனக்கெனப் பிரித்து எடுத்துக்கொள்ளுதல். உல்-இணைத்தற் கருத்து [உல்>எல்>எள்>எடு-த்தல்] எதிர்-த்தல் : 1. தடுத்தல், 2. இகலித் தாக்குதல். உது = முன் தள்ளுதற் கருத்து [உது>உதிர்> எதிர்-த்தல்= முரண், போர்] எந்திரம்: 1. எந்திரப்பொறி, 2. குயவன் சக்கரம், 3. திரிகைக்கல். இய-இயங்குதற் கருத்து [இய>இயங்கு; இய> இயந்திரம்> எந்திரம்.) எய்-தல்: அம்பு செலுத்துதல் இய = செலுத்துதல் பொருள் [இய்> எய> எய்-தல்.] எய்துதல்: 1. அணுகுதல், 2. அடைதல். இய் = செலுத்துதல் 43