பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 வேர்ச்சொல் சுவடி [இய> எய்> எய்து] எயிறு: பல்லின் விளிம்பு எய் = குத்துதல், பிளத்தல், கடித்தல் [எய்> எயிறு.] எரி-தல்: 1. தீ மூலை, சொலித்தல், 2. ஒளிர்தல். உல் = வெப்பப் பொருள் [உல்> அல்> எல்>எரி-தல். உல் வெப்பம்,சூடு] எரு: 1. உரம், 2. மலம், 3. எருது, 4. சாணம். எரு-கழிவை வெளிப்படுத்துவது. [இய>இயல்> எல்> எரு (வெளிப்படுத்துவது)] எருது: ஏரினை (கலப்பையை) வண்டியை இழுக்கும் காளைமாடு. ஈர் - நிலத்தைக் கீறுதல், பிளத்தல், உழுதல் [ஈர்> ஏர் (கலப்பை) > ஏர்து > எருது) எருமை: பால்தரும் கருநிறமாடு இர் > இரு = கருமை {இர்> இரு > இருமை எருமை.] எல்: 1.நெருப்பு, 2. கதிரவன், 3. ஒளிப்பொருள். [உல்> எல்.] எல்லை: 1. நடப்பட்ட எல்லைக்கல் 2. வரம்பு இல் = குத்துதல், நடுதல் [இல்> எல்> எல்லை.] எலி: துளைத்து வளைகளை உருவாக்கி அதில் வாழும் சிறு விலங்கு. இல் = குத்துதல், குடைதல் கருத்துவேர்