பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [இல்> இலி > எலி.] எலும்பு:உடம்பினுள் அமைந்துள்ள சட்டகம் போன்ற வெண்ணிறக் கூடு. [எல் வெண்மை. எல்> எலு> எலுமு> எலும்பு.] எழில் : 1. அழகு, 2. ஒளி. எல் = ஒளி [எல்> எழி> எழில்] எழிலி: மேகம் எழு = மேலெழும்புதல். எழிலி = உயர எழும்பிச் செல்லும் மேகம். எழு > எழுலி > எழிலி] எழுனி: எழுகை, இடுதிரை. எழு = எழுச்சி [எழு> எழுனி > எழினி] எழு-தல் : எழுந்திருத்தல் ஏ = எழுதல் [ஏ> ஏழ்> எழு-தல்] எழுத்து: சொல்லின் அகவுறுப்பாகிய ஒலியைக் கட்புலனாக வரைந்து காட்டும் வரிவடிவம். [இழு > எழு > எழுது> எழுத்து] எழுமை: உயர்ச்சி ஏ = உயர்தல் பொருள் > [ஏ> எல்> எழு எழுமை எள்: சிறிய எண்ணெய் வித்துக் கூலவகை இள் = சிறுமைப் பொருள் [இள் எள்.] 45