பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 வேர்ச்சொல் சுவடி எள்ளு-தல்: இகழ்தல் எள்ளல்-குறைவாக மதித்தல் [எள்> எள்ளு -தல்] எளியன்: 1. வறியவன், 2. எளிதாய் அடையாளப்படுபவன். [எள்> எளி> எளியன்] ஏக்கம் : விரும்பியது எட்டாததால் ஏற்படும் வருத்தம் ஏ = உயர்ச்சிப் பொருள் [ஏ> ஏங்கு> ஏக்கம்.] ஏசல்: இகழ்கை ஏத்து = பிறர்மீது இகழ்த்திப் பேசுதல் [ஏ> ஏத்து > ஏச்சு ஏச்சல்> ஏசல்] ஏணி மேலேறுவதற்கான படிச்சட்டம் ஏண் = உயர்ச்சி [67600767 6001.] ஏணை : 1. உயரத்தினின்று தொங்கும் தொட்டில், 2. புடைவைத் தொட்டில், 3. தூளி. ஏண் = உயர்ச்சி [ஏல்> ஏள்> ஏண்> ஏணை] ஏதம் : 1. துன்பம், 2. குற்றம். ஏய் = மேல்வந்து பாய்தல் [எய்> ஏய்தி > ஏது > ஏதம்.] ஏந்து-தல்:1.உயர்த்துதல், 2. தாங்குதல், 3. சுமத்துதல். ஏ = எய்யும் தொழில் [ஏ> ஏல்> ஏந்து-தல்]