பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி ஏர் : 1. கலப்பை, 2. ஒருகலப்பையும் ஓரிணை மாடும். ஈர்தல் = மண்ணைப் பிளப்பது [ஈர்> ஏர்] எல்: எதிர்கொள்ளுதல் இல் = பொருந்துதல் [இல் எல்> ஏல்] ஏவல்: அதிகாரத்தோடு வேலைவாங்குதல் ஏவுதல் = வேலைபணித்தல் [ஏவு> ஏவல்] ஏழை: 1. அறிவிலான், 2. பொருளிலான். [ஏள்> ஏள் > ஏழ் > ஏழை. ஏற்றம் : 1. மேல் ஏறுகை, 2. ஏற்றமரம். ஏற்று = கீழிருந்து மேலே உயர்த்தல் ஏறு> ஏற்று ஏற்றம்.] ஏறு : உயர்தல் ஏ = உயர்ச்சிப் பொருள் [ஏ> ஏல்> ஏறு ஐ: 1. வியப்பு, 2. தலைவன். ஆ = வியப்பு, முதன்மை, தலைமை. [ஆ>ஆய்>ஆய்>ஐ] ஜூ: ஐந்து எண் கைவிரல் ஐந்தயுைம் அடிப்படையாக வைத்து எண் ஐந்தாகக் கணக்கிடல் வேண்டும். [கைஐ] ஐயம் : தெளிவு குறைவு, நன்கு புலப்படாமை. ஐ = சிறுமை [ஐ>ஐயம்.] 47