பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 வேர்ச்சொல் சுவடி ஒக்கல்: சுற்றத்தார் ஒல் = ஒத்தல், பொருந்துதல் [ஒல்> ஒல்கல்>ஒக்கல்] ஒசத்தி: 1.உயர்வு, 2. மேம்பட்டது. உயர்த்தி = மேலானது [உயர்த்தி> உசர்த்தி >ஒசர்த்தி >ஒசத்தி.] ஒட்டார்: 1. பகைவர், 2. இணங்காதவர். ஒட்டுதல் =சேர்தல் (ஒட்டு + ஆர் 'ஆர்' எதிர்மறைப் பின்னொட்டு) ஒண்ணார்: 1.பொருந்தார், 2. பகைவர். ஒள்ளுதல் = பொருந்துதல் [ஒள்>ஒண்ணு ஒண்ணார் (ஒன்னார் எனவும் வழங்கும்).] ஒப்புரவு: 1.ஒற்றுமை, 2. உலகப்பொது ஒழுகலாறு. ஒப்பு = ஊருடன் ஒத்துப்போதல் [ஒப்பு >ஒப்புரவு ஒழி-தல்: 1. தீர்த்தல், 2. அழிதல், 3. முடிவுக்குவரல். ஒல் =உள்ளொடுங்கல், மறைதல், அழிதல் [ஒல்>ஒள் > ஒளி > ஒழி-தல்.] ஒழுக்கம் 1. நன்னடை, 2. நல்லியல்பு. ஒல் =நல்ல, ஒல்கு = நல்லியல்பு [ஒல்கு>ஒழுக்கு> ஒழுக்கம்.] ஒழுங்கு: நேரிய வரிசை முறை ஒல் =நல்ல, நேரிய [ஒல் > ஒல்கு> ஒழுக்கு ஒழுங்கு]