பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி ஒளிறு-தல் : விளங்குதல் [ஒளி>ஒளிர்> ஒளிறு ஒளிறு-தல்] [உல்>ஒல்> ஒள் - வெளிச்சம்.] [ஒள் > ஒளி>ஒளிறு-தல்] ஓட்டை: துளை [உல்>ஒல்> ஔ > ஓட்டை] ஓடம் : தோணி (நீரில் ஓடுவது) [ஓடு ஓடம்.] ஓது-தல் 1.படித்தல், 2. சொல்லுதல். ஊது = ஒலி எழுப்பிச் சொல்லுதல் [ஊது ஓது>ஓதல்>ஓது-தல்] ஆறுதல்: தணிதல், மன அமைதி பெறுதல். அறுதல் = நீங்குதல், தணிதல் [அறு ஆறு ஆறுதல்.] ஓய்வு: ஒழிவு [ஓய்>ஓய்>ஓய்வு] கக்கம் : கமுக்கூடு, மறைவிடம். [அக்குள்>கக்குள்>கக்கம். கக்கு -தல்: வெளித்தள்ளல் கள் = களைதல், நீக்குதல், வெளிவரல், விலக்கல். [கள்+கு>கக்கு> கக்கு-தல்.] கசக்கு-தல் : 1. நசுங்கச் செய்தல், 2. கசங்கச் செய்தல். கள் = கூடுதல், நெருங்குதல், நெருக்குதல் [கள்>கய>கச>கசக்கு-தல்.] 49