பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 வேர்ச்சொல் சுவடி கசடு: 1. அடிமண்டி, 2. கழிவு, 3. குற்றம். [கசள்>கசண்டு>கசடு } கசப்பு : 1. கைப்பு, 2. அறுசுவைகளுள் ஒன்று, 3.வெறுப்பு. கைத்தல் = கசத்தல் [கைப்பு> கயப்பு> கசப்பு.] கசி-தல்: 1. ஒழுகுதல், 2. ஈரமாதல். கழிதல் = நீங்குதல் [கழி>கயி>கசி-தல்.] கஞ்சி: நீர்ப்பதமான சோற்றுணவு [கழி+ நீர்>கழிநி>கஞ்D>கஞ்சி.] கட்டி: இறுகிய திண்மையான பொருள். கள் = திரளல் [கள்> கட்டு> கட்டி] கட்டு : பிணைப்பு கள் = திரட்சி = ஒன்றாய் இணைத்துக் கட்டுதல். [கள்> கடு> கட்டு} கடவுள் : 1. கடந்து நிற்கும் மெய்ப்பொருள், 2. இயக்குபவன். [கட>கடவு>கடவுள்] கடி-த்தல்: 1.பல்லால் வெட்டுதல், 2. அழுத்துதல், 3. நறுக்குதல். கள்ளுதல் = வெட்டுதல், நீக்குதல் [கள்>கடு>கடி-த்தல்.] கடிதம்: பனை மடல் அல்லது தடிப்பான துணியில் எழுதியனுப்பப்படும் செய்தி. கடி கடிது = திண்மை, தடிப்பு [கடி கடிதுகடிதம்.] கடு-த்தல்: நோவெடுத்தல் வலியெடுத்தல் கள் = முள் [கள்>கடு-த்தல்.