பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கடுமை : 1. சினம், 2. வன்மை, 3. வெம்மை, விரைவு. கடு = கடுமை, விரைவு [கடு> கடுமை.] கடை : 1. கதவு, 2. அங்காடி. டம் கட = கடந்து செல்லக்கூடிய வாயில் இட [கட>கடை] கணப்பு: உடற்சூடு, குளிர்காயும் தீ. கணகணத்தல் = சுடுதல் [கண> கணப்பு. கணு: கரும்பு மூங்கில் முதலிவற்றில் உள்ள இணைப்புப்பகுதி. கண்ணுதல் = பொருந்துதல் [கண் கணு] கத்தரி-த்தல்: சிறிது சிறிதாக வெட்டி எடுத்தல், அறுத்தல். [கள்+து>கத்து>கத்தரி>கத்தரி-த்தல்] கத்தரி: வெட்டியறுக்கும் கருவி கள்ளுதல் = 1. நீக்குதல், 2. வெட்டுதல் [கள்+து> கத்து >கத்தரி.] கத்தி: கூர்மையுள்ள வெட்டும் கருவி [கள் > கட்டு> கத்து கத்தி கத்து-தல் : 1. இரைச்சலிடுதல், 2. உரக்கச் சொல்லுதல். கழறு-தல் = சூளுரைத்தல் (கழல் - (கழறு)> கழல்+து-கழத்து>கத்து-தல்.] கதம்பம்: பல்வகை மலர்களால் தொகுக்கப்பட்ட மாலை [கல கலம்பு கலம்பம் கதம்பம்.] 51