பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 வேர்ச்சொல் சுவடி கதவு : 1. கடந்து செல்லும் வழி, 2. வாயிலை மூடித் திறக்கும் தடுப்பு. கடவு = கடந்து செல்லும் வழி, வாயில் [கடவு> கதவு.] கதிர் : 1. ஒளிக்கீற்று, 2. நேராகச் செல்லும் ஒளி. கதித்தல் = நேராதல் [கதி>கதிர்.] கதை: 1. செய்தியைச் சுவைப்படக் கூறுதல், 2. உரையாடல். கழல் = கூறுதல் [கழல் கதல்>கதைத்தல்>கதை] கந்தகம்: எளிதில் தீப்பற்றக் கூடிய தனிமம் காந்துதல் = எரிதல் [காந்து> காந்தகம்>கந்தகம்.] கந்தல்: 1. கிழிந்த துண்டு, 2. துண்டான துணி. கிழி = பிளந்துபோதல் [கிழி> கிழிந்தல்>கிந்தல் கந்தல்.] கப்பல்: மரக்கலம் கப்புதல் = குழிவிழுதல் கப்பம் = குழிவானகலம் [கப்பம்>கப்பல்.] கம்பம் : 1. அடிமரம், 2. தூண், 3. பெருமரத்தூண். [கொம்பு> கம்பு> கம்பம்.] கமழ்தல்: நறுமணம் வீசுதல் கம் = நிறைதல், பரவுதல், மணம் பரப்புதல் [கம் > கமழ்>கமழ்தல்.] கமுக்கம் 1. மந்தணம், 2. மறைபொருள். கமுக்கு = மந்தணம் [கமுக்கு> கமுக்கம்.]