பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கயிறு: தாம்பு கள் = கட்டுதல், பிணைத்தல் [கள்>கய்>கயில்>கயிறு கரகம் : 1. சிறுகுடம் 2. குழிந்த ஏனம். [கலம்> கலயம் கரசம் கரகம் ] கரப்பு : 1. மறக்கை, 2. வெளிப்படுத்தாமை, 3. மீன்பிடி கூடை, 4. பஞ்சரம். கரப்பு = மறைவு [கரவு>கரப்பு.] கரு : (சூல்), கருப்பம், குழந்தை. குருத்தல் = தோன்றுதல் கரு = சூல், சேய் [குரு> கரு> கருப்பம். கருப்பு : 1. கருமை, 2.இருள். கள் = கருமை [கள் > கரு> கருப்பு = கருமை] கருவல் : குட்டையாள் குறுமை = குள்ளம் [குறு>குறுவல்>குருவல்>கருவல்] கல்வி : 1. கற்கை, 2. ஆய்ந்தறியும் கல்வியறிவு. [கல்> கல்வு > கல்வி.] கல-த்தல்: 1. கூட்டுதல், 2. சேர்த்தல். குல் = கூடற் கருத்துவேர் [குல்>கல்>கல-த்தல்] கலப்பை: 1.நிலத்தில் மண்ணைக்கலக்கும் உழுபடை, 2. ஏர், 3.நாஞ்சில். [கல> கலப்பை] 53