பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 வேர்ச்சொல் சுவடி கலம்: 1.கறுப்புஏனம், 2. உட்குழிவான பாத்திரம். [குல் > கல்> கலம்.] கலாய்-த்தல் : 1. சச்சரவு செய்தல், 2. சினத்தல். கல = பொருதல் பொருள் [கல>கலாய்-த்தல்] கலி : ஒலி பொருந்திச் செய்யும் போர் குல் = கூடற் கருத்து [குல்>கல்>கலி.] கலை-தல்: பிரிந்துபோதல் கலை-த்தல்: சிதைத்தல், கிளறிக்கலைத்தல். குலைத்தல் = பிரித்தல், அழித்தல் [குலை>கலை-த்தல் கவ்வு-தல்: வாயால் பற்றுதல். அவ்வு = வாயாற்பற்றிப்பிடித்தல் [அவ்வு>வவ்வு - கவ்வு-தல்.] கவசம்: காப்புக் கூடு [கவ்வு>கவ்வியம்-கவயம்-கவசம். கவர்ச்சி: மனம் பற்றுதல் கவ்வுதல் = பற்றுதல் [கவ்வு>கவள்>கவல்>கவர்>கவர்ச்சி] கவலை: 1. மனத்துன்பம், 2. பல நினைவுகள் மனத்தைக் கவ்வுதல். [கவ்வு>கவ>கவல்>கவலுதல்>கவலை] கவளம் : வாய் அளவு கொண்ட உணவு [கவ்வு>கவளம்.] கவனம் : 1. குவிந்த நினைவோட்டம், 2. ஒரே நினைவு மனத்தைக்