பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கவ்வியிருத்தல். [கவ்வு>கவ்வல்-கவல்-கவலம்-கவனம்.] கவிச்சு: புலால் அல்லது அழுகல் நாற்றம் கமர்-தல் = எண்ணெய் போன்றவற்றைக் காய்ச்சும் போது முடைநாற்றம் வீசுதல் [கமர்>கமர்ச்சு>கவர்ச்சு> கவிச்சு.] கழகம் : கொள்கையால் சேர்ந்து இயங்கும் அமைப்பு கள்ளுதல் = கூடுதல் [கள்>கள>களகு>கழகு>கழகம்.] கழனி: போரடிக்கும் களமுள்ள வயல் [களம்>களன்>கழனி.] கழி-தல் கடந்து போதல் கழி-த்தல் : நீக்குதல் கள்ளுதல் = நீக்குதல் [கள்>கழி-த்தல்.] கழுதை : வெள்ளை நிற மூக்கும் நீண்ட காதுகளும் கொண்ட குதிரை இனத்தைச் சார்ந்த 'காள்காள்' என்று கத்தும் விலங்கு [காள்>காழ்>கழு கழுதை] கள் : புளித்து நுரைத்துப் பொங்கிய பனை, அல்லது தென்னை போன்றவற்றின் வடிநீர். குல் = கூடற் கருத்துவேர் [குல்>கல்>கள்.] கள்வன்,கள்ளன் : 1. திருடன், 2. கள்ளன்-கள்ளி. கள்ளம் = ஏய்ப்பு, பொய் களவு-திருட்டு கள்ளுதல் = திருடுதல் [கள் > களவு > களவு கள்ளன் களங்கம் : கரியமறு, புகழ்க்கேடு. 55