பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 வேர்ச்சொல் சுவடி கள் = கருமை கள்>களம்>களங்கு = கருமை; குற்றம் [களங்கு>களங்கம்.] களம் : 1. இடம், 2. கதிரடிக்கும் நிலம், 3. அவை, 4. போர் நடக்கும் இடம். கள் = சேர், திரள் [கள்>களம்.] களி: மகிழ்ச்சி களித்தல் = கள்ளுண்டு மகிழ்தல், விளையாடுதல் [கள்>களி.] களிப்பு: மனமகிழ்ச்சி களி = மகிழ்ச்சி [களி+பு (சொல்லாக்க ஈறு)] களை: பயிரின் ஊடே வளரும் தேவையற்ற கழிக்க வேண்டிய புல், பூண்டு முதலியன. கள்ளுதல் = நீக்குதல் [கள்> களை.] கற்பனை : இல்லாதவற்றைக் கற்பித்துக் கொள்ளுதல். கற்பித்தல் = கற்பனை செய்தல், புதிதாக உண்டாக்குதல் [கற்பி>கற்பனை] கற்றல் கல்(ற்)-தல் : 1. படித்தல் 2. பயிலல். கல்லுதல் = தோண்டுதல், ஆய்ந்தறிதல் [கல்லல்>கற்றல். கற்றை : திரட்சி 'குல்' = திரட்சிக் கருத்து [குல்>கல்>கற்றை]