பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கற-த்தல்: 1. வெளிவரச்செய்தல், 2. கவர்தல். கல்லுதல் = தோண்டியெடுத்தல், வெளிவரச்செய்தல் [கல்>கறு>கற-த்தல்.] காசு: பணப்புழக்கத்திற்கு அடிப்படையான, அரசு முத்திரையிட்ட மாழைத்தகடு. [காய்ச்சு>காசு.] காட்சி: 1. காணும் தோற்றம், 2. கண்ணால் காணுதல். [கண்>காண்+சி> காட்சி] காடி : கடுமையாகப் புளித்த நீர்மப்பொருள் கடு = கடுமை [கடு>கடி>காடி] காடு: மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி கடு = அடர்த்தி, மிகுதி, செறிவு [கடு> காடு.] காண்-(ணு)தல் : பார்த்தல் கண் = கண்ணு-தல் = பார்த்தல் [கண்ணுதல்>காண்(ணு-தல்)} காணம்: கோணலாக வளைந்து விளையும் காயிலுள்ள கொள்ளுப்பயறு. [கோணம் > காணம்.] காணி: 1. நில அளவு, 2. ஒரு மாந்தன் இயல்பாகக் காணக்கூடிய தொலைவுப்பரப்பு. [கண்>காணி.] காதல்: பற்றோடு கூடிய அன்பு. கதுவுதல் = பற்றுதல், அணைத்தல் [கதுவு>கதுவல்>காதல்.] 57