பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 வேர்ச்சொல் சுவடி காது : ஒலியைப் பற்றும் உறுப்பான செவி கதுவுதல் = பற்றுதல் [கது> காது] காதை: 1. சொல்லப்பட்டகதை, 2.வரலாறு. கதைத்தல் = சொல்லுதல் [கதை>காதை ] காந்தம் : இரும்பை ஈர்க்கும் ஆற்றல் கவ-கவர்வு = ஈர்த்தல் [கவ>கா-காந்து-காந்தம். காந்தள் : காட்டில் பூக்கும் அழுத்தச் சிவப்பு மலர்வகை காய்தல் - காந்தல்-காந்தள் காந்து-தல்: 1. எரிவெடுத்தல், 2. வெப்பங்கொள்ளுதல், 3. சினத்தல். காய்தல் = வெப்பத்தால் சிவத்தல் [காய்>காய்ந்து>காந்து-தல்.] காப்பு: காவல் கா = கவனித்தல் [கா-காப்பு.] காமம்: விருப்பம் கமம் = விருப்பம், நிறைவு = "கமம் நிறைந்தியலும்" (தொல்.) [கமம் காமம்.] காய்ச்சல்: 1. உடல் வெப்பம், 2. உலர்ச்சி, 3. மனவெரிச்சல். காய்தல் = உலர்தல் [காய் காய்ச்சல்]