பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி காய்ச்சு-தல்: 1. காயச்செய்தல், 2. சமைத்தல், 3. உருக்குதல். [காய்> காய்ச்சு-தல்] காய்-தல் வெப்பமுறுதல் கனல் = வெப்பம் [கனல்> கனய்> காய்-தல்.] காய்--த்தல்: மரஞ்செடி முதலியவற்றில் காய்கள் தோன்றல் [கள் > காள்> காழ் > காய்-த்தல்.] கார் : 1. கருமை, 2. நீர்கொண்ட கரியமுகில். [கரு> கார்.] குதக்குதல் : வாயில் நிறைய அமுக்கி மெல்லுதல் அதுக்குதல் = அமுக்கி மெல்லுதல் [அதுக்கு>உதக்கு> குதக்குதல்.] குதலை : குழந்தை குழறிப்பேசும் மழலைச் சொல் குழறுதல் = நெறிதவறிப் பேசுதல் குழறு> குதறு > குதலை குதறு-தல் : குத்திக் குலைத்தல் குத்தல் = அழுத்திச் சிதைத்தல் குத்தல்> குதல்> குதறு-தல் குதித்தல் : மேலெழும்பிக் குதிங்கால் நிலத்திற் குத்துமாறு ஊன்றி நிற்றல். குத்தல் = ஊன்றுதல் [குத்து>குத்தி >குதி] குதிர்-தல் : 1. ஒரு தீர்மானத்தில் நிற்றல், 2. குடியமர்தல், 3. ஒழுங்காதல், 4.படிந்து நிற்றல். குதித்தல் = ஊன்றி நிற்றல் [குதி>குதிர்>குதிர்-தல்.] குதிரை : குதித்துத் தாண்டி ஓடும் விலங்கு 59