பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 வேர்ச்சொல் சுவடி [குதி>குதிரை.] குந்து-தல் : நிலத்தில் குத்தி உட்கார்தல் குத்து>குந்து-தல்] குப்பம் : மக்கள் கும்பலாகச் சேர்ந்து வாழும் ஊர் கும் = குவிதற் பொருள் [கும் > கும்பு கும்பல்>குப்பல்>குப்பம்] குப்பாயம்: 1. சட்டை, 2. மெய்ச்சட்டை. குல் = கூடற் கருத்து [குல்>குள்>குவ்> குப்பு குப்பாயம்} குப்பி : 1. ஒரு வகைக் குடுவை, 2. மாட்டுக்கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண். (கொப்பு >குப்பு குப்பி] குப்பை : 1. குவியல், 2.கூட்டம். குவி = கூடுதல் [ குவி>குவிப்பு >குப்பு குப்பை] கும்பம் : 1. குவித்து திரண்டிருக்கும் கலம் 2. கும்ப வடிவான மேற்கட்டடம். கும் = குவிதல் பொருள் (கும் கும்பு கும்பம்.] கும்பல்: 1. குவியல், 2. திரள். கும்பு = திரள், குழு (கும்>கும்பு>கும்பல்/ கும்மி: மகளிர் வட்டமாக நின்று கை கொட்டிப் பாடியாடும் விளையாட்டு. கொம்மை = வட்டம் [கொம்மை > கொம்மி> கும்மி.