பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 வேர்ச்சொல் சுவடி குலம் : 1. குடி, 2. உயர்குலம், 3. இனம். குல் = கூடற் கருத்துவேர் [குல்> குலம்.] குலவு-தல் : 1. நெருங்கியுறவாடுதல், 2. குவிதல், 3. வளைதல். குல் = கூடுதற் பொருள் [ குல்> குல குலவு-தல்] குவி-தல்: 1. குவியலாதல், 2. கூம்புதல். குல் = குவிதற் பொருள் குல்> குள்> குவ்வு குவி-தல்] குவை : குவியல் குல் = குவிதற் பொருள் [ குல் > குள்> குவ் குவ்வு குவை] குழப்பம்:1. தாறுமாறு, 2. மனக்கலக்கம். குழம்புதல் = மனங்கலங்குதல் (குழம்பு>குழப்பு>குழப்பம்] குழவி : 1. ஒரு சார் விலங்கின் பிள்ளைப்பெயர், 2. புல்மர முதலிய ஓரறிவுயிரின் இளமைப் பெயர். குள் = தோன்றுதல் பொருள் [ குள் > குழ> குழவி.] குழாம்: 1. கூட்டம், 2. ஊர்ப் பெரியோர்கள் கூடும் சபை. குழு = மக்கட் கூட்டம் ( குழு > குழுமம் > குழாம்.] குழாய் : 1. துளையுடைய பொருள், 2. துளை. குள் = துளைத்தற் பொருள் [ குள் > குழை > குழாய்.] குழி : 1. பள்ளம், 2. நீர்நிலை, 3. ஓர் எண்ணின் வருக்கம்.