பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 வேர்ச்சொல் சுவடி [குறி> குறிப்பு] குறில் : குற்றெழுத்து குல் = குறுமைப் பொருள் [குல்>குறு> குறில்] குறுக்கம் : குறுகிய நிலை குறுகு = குள்ளமாதல் குறுகு> குறுக்கம்] குறுக்கல் : குறைக்கை குறுக்கு = குறுமை ( குறுக்கு > குறுக்கல்.] குறுக்கீடு: குறுக்கிடுகை குல் = வளைதல் (குல்-குறு-குறுக்கு) குறுக்கிடு- குறுக்கே செல்லுதல் ( குறுக்கிடு > குறுக்கீடு] குறுக்கு-தல் : 1. குறையச் செய்தல், 2. சுருக்குதல். குறுகு = குள்ளமாதல், சிறுகுதல் [ குறுகு> குறுக்கு-தல்/ குறுகுறு-த்தல் : மனச்சான்று குத்துதல் குல் = குத்தற் பொருள் [ குல்> குறு + குறு-த்தல்] குறும்பர்: 1. குறுநில மன்னர், 2. வேடர். குறும்பு = குறுநில மன்னர் [ குறும்பு> குறும்பர்.] குறும்பு: 1. போக்கிரித்தனம், 2. தொல்லை தரும் சிறுமைத்தனம். குல் = சிறுமைப் பொருள் குல்> குள்> குறுகுறும்பு] குறுவை : குறுகிய காலத்தில் விளையும் பயிர் குல் = சிறுமைப் பொருள் குல்> குறு> குறுவை]