பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 வேர்ச்சொல் சுவடி (கூடு கூட்டம்.] கூட்டம் : போர் கூடு= ஆயுதம் முதலியவற்றின் உறை (கூடு கூட்டம்.] கூட்டல்: எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணித வகை கூடுதல்= சேர்த்தல் [கூடு கூட்டல் கூட்டு-தல் : தொகை கூட்டுதல் கூடு = கூடற் கருத்துவேர் (கூடு கூட்டு-தல்] கூட்டு: கலப்பு (கூடு கூட்டு.) கூடம் : வீட்டில் உள்ள அறைகள் கூடுமிடம் கூடு = சேர்தல் பொருள் [கூடு கூடம்] கூடல்1: தலைவனும் தலைவியும் சேர்தல் கூடுதல் = சேர்தல் [கூடு கூடல்.] கூடல்2 : ஆறுகள் பலவும் கூடும் (நகரம்) இடம் கூடு = சேர்தல் பொருள் [கூடுகூடல்.] கூடாரம்: கூம்பு வடிவான கூரையையுடைய குடில் குல் = கூடுதற் பொருள் [குல்>குள்> கூள் கூடு> கூடாரம்] கூடு : பறவை முதலியவற்றின் வளைந்த கூடு குல் = வளைவுப் பொருள்