பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [குல்>குள்>கூடு) கூடுதல்: 1. மிகுதி, 2. அதிகம், 3. மொத்தம். கூடல் = திரள், அதிகமாதல் (கூடு>கூடுதல்.] கூண்டு: வட்டமான பறவைக் கூடு குல் = வளைவுக் கருத்து [குல்>குள்> கூள்கூண்டு கூத்தி: 1. நாடகக்கணிகை, 2. விலைமகள், 3. வைப்பாட்டி கூத்து = நாடகம் [கூத்து>கூத்தி.] கூத்து: நிலத்தில் காலூன்றி ஆடுதல் குல் = குத்துதற் கருத்து குத்து = நிலத்தில் ஊன்றுதல் குல்>குத்து கூத்து (பல வகைகளில் கால் குத்திட்டு ஆடுவது).] கூதிர்: பனிக்காலம் கூதல் = குளிர் [கூதல்>கூதிர்] கூந்தல்: 1. பெண்டிரின் கொத்தான தலைமயிர், 2.மயில்தோகை. குத்து - கொத்து = திரட்சி [கொத்து >குத்து>குந்து> கூந்து = மயிர்க்கொத்து [கூந்து>கூந்தல்.] கூப்பிடு-தல்: உதவி வேண்டி அழைத்தல் கூவு = பறவை கூவுதல் கூவு>கூவிடு> கூப்பிடு-தல்] கூப்பிடு-தல்: தொழுதற்குக் கைகுவித்தல் 67