பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 வேர்ச்சொல் சுவடி கூப்புதல் = குவித்தல் (கூப்பு + இடு>கூப்பிடு-தல். கூப்பு-தல்: கைகுவித்தல் (குவிப்பு>கூப்பு-தல்] கூம்பு-தல்: 1. ஒடுங்குதல், 2. சுருங்குதல், 3. ஊக்கங் குறைதல். குவிதல் = சுருங்குதல், ஒடுங்குதல் [குவி>கும்பு> கூம்பு-தல்] கூர்-தல்: 1. மிகுதல், 2. விருப்பங் கொள்ளுதல், 3. அளவு குறைதல். குல் = மிகுதல், மேற்செல்லுதல், வளைதல், சுருங்கல். [குல்>கூல்>கூர்-தல்.] கூர்-தல்: 1.கூர்மையாதல், 2. அறிவு நுட்பமாதல். குல் = மிகுதல் [குல்>கூல்>கூர்-தல்.] கூரை: கூர்முனை வடிவான வீட்டு முகடு கூர் = கூம்பு வடிவம் [கூர்>கூரை] கூலம் : புல், வரகு, தினை, சாமை, கம்பு போன்ற இருபுறமும் கூர்மையாக உள்ள கூலவகை. [கூர்> கூல் கூலம்.] கூலி : 1. வேலைக்குப் பெறும் ஊதியம், 2. வாடகை. கூலம் பயிர்வகை வயல் வேலைக்கு ஊதியமாகப் பயிர்க் கூலமே கொடுக்கப்பட்டது. [கூலம்>கூலி] கூவம் : கிணறு குல் = தோண்டுதல் [குல்>குள்>குவ்> குவ்வல் கூவல் கூவம்.] கூவல்': குழி, கிணறு. (கூவம் >கூவல்.]