பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கூவல் : 1.கூவுகை. கூ = பறவை எழுப்பும் ஒலி [கூகூவு>கூவல்.] கூவு-தல் : பறவை கூவுதல், கதறுதல், ஒலியெழுப்புதல், ஓலமிடுதல். கூ = குயில் கூவும் ஒலி, கூக்குரல், ஒலிக்குறிப்பு [கூ>கூவு-தல்] கூவு--தல்: அழைத்தல் கூ=விளிக்குரல் [கூ>கூவு-தல்] கூளி: குள்ளமான பேய் குல் = சிறுமைப் பொருள் [குல்>குள்> கூள்>கூளி] கூளி*: 1.குள்ளம், 2. கற்பில்லாதவள். குல் = சிறுமைப் பொருள் [குல்>குள்>கூள்>கூளி> (குட்டை, சிறுமை, இழிவு). கூற்றன்: எமன் கூறுபடுத்தல் = பிரித்தல் [கூறு>கூற்று கூற்றன் (உடலையும் உயிரையும் கூறுபடுத்துபவன் கூற்றன்.] கூற்று: 1. கூறுகை, 2. மொழி, 3. சொல், 4. கூறத்தக்கது. கூறு = தன்மை (கூறுகூற்று.] கூனி : 1. கூனலுள்ளவள், 2. இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சி செய்து தடுத்த மந்தரை. கூன் = உடற் கூனல் (கூன்>கூனி] கெட்டிக்காரன் : 1. திறமையானவன், 2. துணிச்சல் மிக்கவன். கட்டி = இறுகிய பொருள் 69