பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 வேர்ச்சொல் சுவடி [கட்டி>கெட்டி + காரன்.] கெடு-தல் : 1. பழுதாதல், 2. செயலிழத்தல். [கள் (வெட்டுதல் நீக்குதல்)> கடு > கெடு - தல்] கெண்டை : 1. நன்னீரில் வாழும் மீன், 2. கெண்டை மீன் போன்ற கணைக்கால் (சதை). (கண்டு (திரட்சி) > கண்டை> கெண்டை] கெழுவு-தல்: பொருந்துதல், மயங்குதல், பற்றுக்கொள்ளுதல். கெழு = நெருக்குமாதல் குள்> கெழு > கெழுவு-தல்.] கேட்டல் : 1. செவி கொடுத்தல், 2. வினாவல், 3. வேண்டுதல். கேள் = செவிப்புலனுணர்வைப் பெறுதல் கேள்> கேட்டல்] கேடயம்': போரிடும் போது எதிரியின் படைக்கருவி உடல் மேல் படாதவாறு தடுக்கும் வட்டமான பிடிவைத்த தட்டுக்கருவி. கோடு = வளைவு கோடு கோடகம் கேடகம் கேடயம்.] கேடயம்: பெற்ற வெற்றி, புரிந்த அருஞ்செயல் முதலிய செய்தி பொறித்த தட்டு வடிவ அழகிய பரிசு. கிடுகு = பிடி இணைத்துக் கோத்தது கிடுகு> கேடகம் கேடயம்] கேணி : 1. சிறுகுளம், 2. கிணறு, 3.அகழி. கிள்ளுதல் = தோண்டுதல் [கிள்> கெள்> கேள்> கேணி ] கேவு-தல்: 1.மூச்சுத் திணறல், 2. செறுமி அழுகல், 3. மூச்சுத் திக்காடல். கவ்வு = கௌவுதல் [கவ்வு> கெளவு கேவு-தல்.] கேள்வி : 1. வினா, ஏலம், முதலியன கேட்கை, 2. இசைவுக் குறிப்பு. கேள் = வினாதல் கேள்> கேள்வி.]