பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கொடி : மகளிர் கழுத்தணி குல் = வளைதற் பொருள் [குல்>கொள்>கொடு> கொடி] கொடு : கையை வளைத்துப்பொருளைப் பிறர்க்குத் தருதல் குல் = வளைதற் பொருள் [ குல்> குள்> கொள்> கொடு] கொடுக்கு : வளைந்து கொட்டும் உறுப்பு குல் = வளைதற் கருத்து [ குல்> குள்> கொள்> கொடு> கொடுக்கு] கொடுமை: 1. வளைவு, 2. மனக்கோட்டம். குல் = வளைதற் கருத்து [குல்> குள்> கொள்> கொடு> கொடுமை] கொடுவாள் : வளைந்த வெட்டறுவாள் குல் = வளைவு [குல்> குள்> கொள்> கொடு + வாள்] கொடை : எல்லாப் பொருளும் கொடுக்கை கொடு= கொடுத்தல் கொடு> கொடை] கொண்டல்: கொள்ளுகை கொள்> கொண்டு கொண்டல் கொண்டாட்டம் : நிகழ்ச்சியை மனத்துட் கொண்டு அல்லது ஒருவரைத் தலைமேற் கொண்டு ஆடுதல். கொண்டு + ஆட்டம் ஆடு>ஆட்டம்] கொண்டி: கழுத்தணி, வளையல், போன்றவற்றில் இணைக்கும் வளைந்த பகுதி. குள் = வளைவுப் பொருள் [குல்> கொள்> கொண்டி] 73