பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கொப்புளம் : 1. நீர்க்கட்டி, 2. உள்ளீடற்ற குமிழ் கொப்பு = உள்ளீடற்ற குமிழ் கொப்புள்> கொப்புளி> கொப்புளம்.] கொம்பு : 1. வளைந்த விலங்குக் கொம்பு, 2. மரக்கிளை. கொள் = வளைந்த கொள்> கொண்> கொண்பு கொம்பு] கொய்-தல் : பறித்தல், கிள்ளியெடுத்தல். கொள் = வளைதற் பொருள் கொள்> கொய்> கொய்-தல்.] கொல்-தல் : உயிரைப் பறித்தல் குல் = குத்துதற் பொருள் [குல்> கொல்-தல்.] கொல்லை : புன்செய் நிலம் குல் = வளைவு குல்> கொல்> கொல்லை] கொலை : உயிர் பறித்தல் குல் = குத்தற் பொருள் குல்> கொல்> கொலை] கொழு-த்தல் : உடற் கொழுத்தல் குள் = திரட்சிப் பொருள் [குள் கொள்> கொழு-த்தல்] கொழுந்து : துளிர்க்கும் இலை குல் = தோன்றுதல் [ குல்>குள்> கொள்> கொழு கொழுந்து) கொழுப்பு : செழிப்பு, தசைவளம். 75