பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கோட்டை : வட்டமான மதிலரண் கோடு = வளைவு கோடு கோட்டை] கோட்பாடு: 1. கொள்கை, 2. கடைப்பிடிப்பு. [கொள்> கோள் + பாடு.] கோடங்கி : 1. உடுக்கை, 2. உடுக்கையடித்துக் குறி சொல்வோன் கோடு = வளைவு, வட்டம். கொடுகோடு கோடாங்கி> கோடங்கி] கோடரி : மரக்கிளையை வெட்டும் கருவி கோடு = மரக்கிளை, அரிதல் = வெட்டுதல் (கோடு அரி] கோடல்': கொள்ளுகை கொள் + கோடல் கோடல்2 : வளைவு கோடு கோடல்.] கோடி' : விளிம்பில் கரை (கோடு) கட்டிய புத்தாடை கோடு = ஆடைக்கரை கோடு கோடி] கோடி: நூறு நூறாயிரம், எண்ணின் மிகுதி. கோடி = எல்லை, கடைசி கோடு = எல்லை, வரம்பு கோடு கோடி] கோடி 3 : 1. நுனி, 2. மூலை, 3. விளிம்பு. கோடு = விளிம்பு, முகடு கோடு கோடி] கோடு': 1. வளைவு, 2. நடுநிலை நீங்குகை. கோண் = வளைவு 77