பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 கோண்> கோடு) கோடு: கொடுமை கொள் = கொடு கோடு] கோடை : 1. மேல்காற்று, 2. வேனிற்காலம். குடக்கு = கதிரவன் மறையும் மேற்குத்திசை கொடுகோடு கோடை] கோண் : 1. வளைவு, 2. கோணம். குல் = வளைதற் கருத்துவேர் [குல்> குள் கொள் கோள்> கோண்] கோணங்கி : 1. கோமாளி, 2. உடற்கோணி ஆட்டம், 3. நகைச்சுவை நாடகம். கோண் = வளைவு, மாறுபாடு கோண்> கோணங்கி] கோணம்' : 1. வளைவு, 2. யானைத்தோட்டி கோண் = வளைவு கோண்> கோணம்.] கோணம் : 1. மூலை, 2. ஒதுக்குப்புறமான இடம். கோண்> கோணம்.] கோணல் : 1. வளைவு, 2. முறையற்ற போக்கு. கோண்> கோணல்] கோணை : 1. வளைவு, 2. கோணல், 3. கொடுமை. கோண்> கோணை] கோத்தர் : நீலமலைவாழ் பழங்குடியினர் கோ = மலை கோ கோத்தர்] வேர்ச்சொல் சுவடி