பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கோது-தல் : 1. அலகால் இறகைக் குடைந்து நேராக்குதல், 2. மயிர்ச் சிக்கெடுத்தல். கொழுது-தல் = குடைதல் [கொழுது> கோது-தல்] கோதை : 1. பெண்களின் தலைமயிர், 2. பெண், 3. ஆண்டாள், 4.முத்தாரம். கோது-தல் = மயிர்ச் சிக்கெடுத்தல் கோது> கோதை] கோப்பியம் : 1. ஒளித்து வைத்தல், 2. காத்தல், 3. அடக்கம். [கோப்பு > கோப்பியம்.] கோப்பு' : 1. கோக்கை, 2. ஒழுங்கு. கோ-த்தல் = மணி முதலியற்றினூடு நூலைப் புகுத்தி இணைத்தல் [கோ>கோப்பு] கோப்பு ' : 1. இணைத் தொகுப்பு, 2. பதிவு மூலங்களின் தொகுப்பு. கோ-த்தல் = தொகுத்துரைத்தல் [கோ>கோப்பு] கோப்பை : 1. வெள்ளைக் களிமண்ணால் செய்த சீனக்கலம், 2.வேலைப்பாடு கொண்ட பரிசுப்பொருள். கும்பம் = மட்பாண்டம், குப்பி = குடுவை [கும்பம்>கும்பி> குப்பி> கோப்பை] கோமாளி : 1. நகைச்சுவையூட்டுபவன், 2. பேதை. கும்மாளம் = குதித்து விளையாடுகை [கும்மாளம்>கும்மாளி கோமாளி] கோயன் : 1.மாடு மேய்ப்பவன், 2.ஆயன் கோடு=ஆன் (மாடு) 79