பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 (கோன் + அன் = கோவன் கோயன்] கோரிக்கை : 1. வேண்டுகோள், 2. விருப்பம். கோருதல் = வேண்டுதல், விரும்புதல் கோரு> கோரி கோரிக்கை.] கோரை : 1. புல்வகை, 2. ஒருவகைக் கிழங்கு. கோர் (நீட்சி)> கோரை கோல் : 1. கழி, 2. உருண்டை, 3. திரண்ட கம்பு, 4. மரக்கொம்பு, 5 வட்டம். [குல் கொல்> கோல்] வேர்ச்சொல் சுவடி கோலம் : 1. அழகு, 2. மா-கற்பொடி இவற்றாலிடும் கோலம். (கோல் (அழகியது)> கோல் + அம் = கோலம்.] கோலு-தல் :1. பாத்தி முதலியன வகுத்தல், 2.வளைத்தல். குல் = வளைதற் கருத்துவேர் குல்> கொல்> கோல் கோலு-தல்] கோவலர் : ஆநிரை காக்கும் இடையர் கோ = ஆன் (மாடு) கோ> கோவு> கோவல் + அர்.] கோவலன் : மாட்டு மந்தைகளையுடைய பெருஞ்செல்வன் சிலப்பதிகாரத் காப்பியக் தலைவன். கோ = ஆன், கோவல் = மாட்டுமந்தை கோ> கோவு> கோவல் + அன் = கோவலன்] கோவில் : வழிபாட்டுக்கான கட்டடம் கோ = 1. இறைவன், 2.அரசன், 3. தலைமை. (கோ> கோவு + இல் = கோவில்.] கோவை: 1. கோக்கை, 2. கோத்த வடம். கோ-த்தல் = மணி முதலியவற்றினூடு நூலைப் புகுத்தி இணைத்தல்