பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கோ கோவை] கோழி :முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத நிலத்தைக் கிளறும் பறவை. கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி கொழு கொழு கோழி] கோழை : 1. சளி, 2. உமிழ்நீர், 3. மனத்திடம் இல்லாதவன், 4.சிறுபிள்ளை. (குழ> கொழு கோழை] கோள் : 1. கொள்ளுகை, 2. துணிபு, 3. வலிமை. கொள்> கோள்] கோளகம் : 1. உருண்டை வடிவ மிளகு, 2. திப்பிலி. கோளம் கோளகம்.] கோளம் : 1. உருண்டை, 2. உடலில் நீர்சுரக்கும் சுரப்பி. கோள் கோளம்.] கோளாறு: 1. தாறுமாறு, 2. குற்றம், 3. சண்டை குழறுபடை = தாறுமாறு (குழறு> குளறு குளாறு> கோளாறு} கோளாறு: ஏற்றுக்கொள்ளத்தக்க வழிவகை கோள் = கொள்ளுகை கொள்> கோள் + ஆறு கோளாறு] கோறல்: கொல்லுகை கொல்(லு)-தல் = கொலை செய்தல் கொல்> கோறு கோறல்.] கோறை : 1. பழுது, 2. சிராய்த்த காயம், 3. துளை. குறை = குற்றம், பழுது 81