பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 வேர்ச்சொல் சுவடி > [ குறை கோறை] கோன் : 1. அரசன், 2. தலைவன். கோவன் = அரசன் கோவன்>கோன். இடையன் மாடுகளைக் காப்பது போல் காக்கும் அரசன்.] கோனார் : ஆநிரை காக்கும் இடையர் பட்டப்பெயர். கோ=மாடு கோ> கோன்> கோனார்] கௌவை : 1. ஒலி, 2. பழிச்சொல், 3. துன்பம். கவ்வை = துன்பம் கவ்வை> கௌவை.] சக்கரம் : 1. வட்டம், 2. குயவன்சக்கரம், 3. சக்கரப் படை, 4. ஆட்சிச் சக்கரம். சருக்குதல் = வளைதல், வழுக்குதல் சருக்கு> சருக்கரம் சக்கரம். சக்கை : 1. உள்ளீடற்றது, 2. தட்டையானது. தக்கை = தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் மிதப்புச் சக்கைத் துண்டு தக்கை> சக்கை.] சகடம் : 1. சக்கரம், 2. வண்டி, 3. தேர். சக்கடா = கட்டை வண்டி சக்கடம்> சகடம்.] சகடு : 1. சக்கரம், 2. வண்டி, 3.வண்டிச் சக்கரம். தகடு = வட்டம், வண்டியின் உருளை (தகடு> சகடு]