பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி சகதி : 1. சேறு, 2. ஈரக்குழைவான மண். அள்ளல் = செறிவு, சேறு அள்ளல் = சள்ளல் [சள்>சய்>சக+தி சகதி.] சங்கம் : 1. சங்கு, 2. கைவளை. சங்கு = சங்கினால் செய்த கைவளை [சங்கு>சங்கம்] சட்டகம் : 1. மரச்சட்டம், 2. உடல் சட்டம் = மரச்சட்டம், உடம்பு [சட்டம்>சட்டகம்.] சட்டம்: 1. மரச்சட்டம், 2. உடம்பு, 3. நேர்மை 4 அணியம். தட்டு = மரச்சட்டத்திலுள்ள துளை (தட்டு>சட்டு சட்டம்] சட்டி : அகன்ற வாயுள்ளதும், அடிப்பக்கம் தட்டையாகவுள்ளதுமான மட்பாண்டம். தட்டு-தல் = தட்டையாக்குதல் (தட்டு>சட்டு சட்டி} சட்டுவம் : 1. அகப்பை, 2. தட்டையான தோசை திருப்பி. சட்டுதல் = தட்டுதல் சட்டு>சட்டுவம்.] சட்டை' : 1. மெய்ப்பை, 2. யாக்கை, 3. உடம்பின் மீத்தோல். சட்டம் = உடம்பு (சட்டம்>சட்டை] சட்டை : 1. தட்டை, 2. தட்டையான பொருள். [தட்டை>சட்டை] 83